சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ வி.எஸ்.பாபு (வயது 75) மாரடைப்பு காரணமாக காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு குறித்த தகவல் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த வி.எஸ்.பாபு,

மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது மறைவு அரசயில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை முன்பு விஎஸ்பாபுவின் உறவினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நுரையூரல் தொற்றால் கடந்த 70 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஎஸ் பாபு இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். என்று எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வௌியிட்டுள்ளது.
