தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் அரசியல் பயணத்தை பிரதிபலிக்குள் வகையில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற பெயரில் கண்காட்சிக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. 




“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” கண்காட்சியை கண்டுகளித்து விட்டு வரும் பொதுமக்களிடம் கருத்துக்களை பதிவு செய்து அதனை ஒளிப்பரப்பு செய்ய கோவை சூரியன் டிவி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் கருத்துக்களை தெரிவிக்கும் பார்வையாளர்களுக்கு கோவை சூரியன் டிவி சார்பில் ஒரு கூப்பன் வழங்கப்படுகிறது. அதில் கேட்கப்படும் கேள்விக்கு டிக் செய்தும் அந்த கூப்பனில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அந்த பெட்டியில் போடப்படும் கூப்பன்கள் குலுக்கல் முறையில் எடுக்கப்பட்டு ஒருவருக்கு சூரியன் டிவி சார்பில் கவர்ச்சிகரமான பரிசு வழங்கப்படுகிறது..

