Skip to content
Home » கோவை….தேர்தல் விதி மீறிய அண்ணாமலை…. திமுகவினர் மீது பாஜக கொடூர தாக்குதல்

கோவை….தேர்தல் விதி மீறிய அண்ணாமலை…. திமுகவினர் மீது பாஜக கொடூர தாக்குதல்

  • by Senthil

 தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும்  5 தினங்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.  தேர்தல் நடத்தை விதிமுறைப்படி இரவு 10 மணிக்கு பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.  ஆனால் கோவையில் பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை எப்போதும் மதிப்பதில்லை.  இரவு 10 மணிக்கு பின்னரும் தேர்தல் பிசாரம் செய்கிறார்கள்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை   கோவை ஆவாரம்பாளையம் 28வது வார்டு பகுதியில்  நேற்று இரவு 10.40 மணி அளவில்  பிரசாரம் செய்தார். இதைப்பார்த்த திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகிகள்,  10 மணிக்கு  மேல் நீஙகள் ஏன் பிரசாரம் செய்கிறீர்கள் ?  என திமுகவினர் கேட்டனர்., அப்போது பாஜகவினர், அப்படித்தான் செய்வோம். உஙு்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளு்ங்கள் என்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  திடீரென  திமுகவினரை பாஜகவினர் உருட்டுகட்டை, இரும்பு தடி ஆகியவற்றால் தாக்கினர். இதில் திமுகவினர்  மண்டை உடைந்தது.   படுகாயங்களுடன் பலர் ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டனர்.  சம்பவம் குறித்து அறிந்த வேட்பாளர்  கணவதி ராஜ்குமார், மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட  நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் கூடியிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த களேபரங்களுக்கு இடையே, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் அண்ணாமலையின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனிடையே தங்களை தாக்கிய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் குணசேகரன் என்பவர்  போலீசில்  புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க.வினர் மாசாணி, ஆனந்தன், லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகியோர் மீது 3 பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடியது, அவதூறு பேசியது, அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, அண்ணாமலைக்கு  தோல்வி பயம் வந்து விட்டது. எனவே  அவர்கள்  வன்முறையை கையில் எடுத்துள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டில் தனது தொகுதியில் எப்படியாவது  தேர்தலை நிறுத்தவிட வேண்டும் என அண்ணாமலை  முயற்சி செய்து இதுபோன்ற  கலவரங்களை கட்டவிழ்த்து விடுகிறார். இதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.  பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும்  தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!