Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி(CRPF) இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகளவு இருக்கும்.

அவ்வப்போது வனத்திற்குள் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அந்த கல்லூரியை சுற்றி திரியும். மேலும் அங்குள்ள ஊருக்குள்ளும் புகும் யானைகள் சேதங்களை விளைவித்து செல்கின்றன.

இந்லையில் நேற்று இரவு CRPF முகாமிற்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தி அரிசி, மாவு பொருட்கள் ஆகியவற்றை சாப்பிட்டு சென்றுள்ளது. யானை முகாமிற்குள் நுழைந்து உணவு சாப்பிடுவதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!