Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக கோவை மாவட்ட கழக நிர்வாகிகள், நகர ஒன்றிய

கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலை குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!