Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை….கோவையில் சம்பவம்..

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் மகன் ஜோதிஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கல்யாணசுந்தரம், சவுதி அரேபியாவில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் ஜோதிஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் வெளியே சென்று இருந்த நிலையில் விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி விஜயலட்சுமியை மிரட்டி செல்லோ டேப்பால் வாய் மற்றும் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு வீட்டிலிருந்த 20 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!