Skip to content
Home » விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

  • by Senthil

இந்தியாவிலேயே முதன் முறையாக,  விஷக்கடி  பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில்  துவக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அப்பொழுது பேசிய லண்டன் ரேடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரி கூறியதாவது:

இங்கிலாந்தில் உள்ள ரேடிங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் விஷங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த படிப்பில், விஷம் பற்றியும், அவைகளின் தன்மை பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக படிப்பார்கள், மேலும் பாம்புகளின் விஷம், முதுகெலும்பு இல்லாத ஊர்வனவைகளான பூரான், சிலந்தி, தேள்களின் விஷம் குறித்து விரிவாக படிப்பார்கள்.

மேலும் தாவரங்களில் உள்ள , விஷங்கள், அவற்றின் விளைவுகள் பற்றியும் படிப்பார்கள், முக்கியமாக விஷக்கடிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பார்கள், என்பது பற்றியும் மற்றும், உயிரை கொல்லக் கூடிய விஷத்தை மருந்துகளாக பயன்படுத்துவது, குறித்தும் விரிவாக படிப்பார்கள்,
இந்த படிப்பானது, 10 வாரங்களுக்குள் முடிந்து விடும், அவ்வாறு முடித்த மாணவ மாணவிகளுக்கு, இதற்காக சான்றிதழ் வழங்கபடும், அதனை வைத்து மாணவர்கள், விஷங்களை பற்றிய ஆராய்ச்சியிலும், பெரியமருந்து கம்பெனிகளிலும் சேர்வதற்கான, வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இந்த படிப்பில் சேர 12 வது முடித்து இருந்தால் பொதுமானதது.

இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி, கோவையை சார்ந்த பொதுமக்கள், வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளும் சேர்ந்து  பயனடையலாம், வாரத்தில் எதாவது ஒரு நாள், 2மணி நேரம் மட்டும் பயிற்சியளிக்க படும், இதற்காக சிறப்பு பயிற்சி மையம் இங்கு அமைக்கபட்டுள்ளது இதனை கோவையை சார்த்த அனைவரும் படிக்கலாம்.

இவ்வாறு அவர்  கூறினார் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது  பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் யசோதா தேவி, முதல்வர் மீனா, தாவரவியல் துறை தலைவர் கிருஷ்ணவேணி, உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் நிர்மல் குமார், ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் குமார்  உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!