Skip to content
Home » அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு ஆடு வழங்கிய திமுக ஐடி விங் நிர்வாகி…

அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு ஆடு வழங்கிய திமுக ஐடி விங் நிர்வாகி…

இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மருதமலையில் இன்று பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, உடன் இருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு, திமுக ஐடி விங் மருதமலை பகுதி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் ஆட்டுக்குட்டி வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது, பார்த்திபன்- வடிவேல் காமெடி மாதிரி, பார்த்திபன் அருவாளுடன் இருப்பது போன்றும், வடிவேல் கழுத்தில் கயிறு கட்டி இழுப்பது போன்றும், படத்துடன், “கோவை மக்கள் – ஆடு” என சித்தரிக்கப்பட்டு வைரலாகி வருகின்றது.

கோவைக்கு பாஜக அண்ணாமலை அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர் டிஆர்பி ராஜா, “கோவை மக்களுக்கு பிரியாணி ரெடி” என கூறியது டிரெண்டிங் ஆனது. தற்போது இந்த ஆட்டுக்குட்டி டிரண்டிங் ஆகி வருகின்றது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!