Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை சஞ்சய்ராஜா மீது துப்பாக்கி சூடு ஏன்? பரபரப்பு தகவல்

கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் – முதல் குற்றவாளியாக செயல்பட்டு வந்த சஞ்சய் ராஜா என்பவர் இன்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்டுகொல்ல  முயன்றபோது, அவரை  போலீசார் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சத்தியபாண்டி என்பவர் கோவையில் தங்கி கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020ம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் சத்தியபாண்டியை மற்றொரு கும்பல் முன்விரோதம் காரணமாக பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் துப்பாக்கியால் சுட்டும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டியும்  கொலை வெறித்தாக்குதல் நடத்தியது.அதில் சத்தியபாய்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் , காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர்  அரக்கோணம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் சரணடைந்தனர்.

விசாரணையில் இந்த தாக்குதலுக்கு  சஞ்சய்ராஜா என்பவர் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.எனவே சஞ்சய் ராஜாவை பிடிக்க   போலீசார் கோவை மற்றும் கர்நாடக பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சஞ்சய்ராஜா  சென்னை எழும்பூர் கோாட்டில் சரண் அடைந்தார்.

அதனை தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சஞ்சய் ராஜாவை போலிஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கியை தான் எடுத்து தருவதாக சஞ்சய் கூறியுள்ளார்.

இதையடுத்து துப்பாக்கியை எடுக்க காவலர்களை கோவை கரட்டுமேடு பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சஞ்சய் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணலீலாவை சுட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக ஆய்வாளர் கிருஷ்ணலீலா தப்பி ஒரு மரத்தின் பின்னால் மறைந்திட அருகில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தற்காத்துக் கொள்வதற்காக சஞ்சய்ராஜாவின் இடது கால் முட்டியின் கீழ்  துப்பாக்கியால்  சுட்டுள்ளார்.

இதனையடுத்து சஞ்சய் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே தவற விட்டு விழுந்திட காவலர்கள் சஞ்சயை பிடித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!