கரூர் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 54. இவர் குளித்தலை நெடுஞ்சாலை துறை பயணியர் ஆய்வு மாளிகையில் சாலை பணியாளர் மற்றும் இரவு நேர வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்ட்டு சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலை மருத்துவமனையை விட்டு வெளியேறி பயணியர் ஆய்வு மாளிகைக்கு வந்து வாட்ச்மேன் தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளித்தலை நெடுஞ்சாலைதுறை பயணியர்… ஆய்வு மாளிகையில் தூக்கிட்டு தற்கொலை..
- by Authour
