Skip to content
Home » குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சியில் நெடுஞ்சாலை துறையின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு புதிய பாலங்கள் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

அதன்படி நங்கவரம் உயர்நிலைப் பள்ளி அருகே நங்கம் காட்டுவாரியின் குறுக்கே உள்ள பழைய குறுகிய பாலத்தினை இடித்துவிட்டு ரூபாய் 2.75 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கும், பனையூர் காட்டுவாரியின் குறுக்கே 1.83 கோடி மதிப்பில் புதிய பாடம் கட்டும் பணிக்கும், தென்கடை குறிச்சி ஒத்தக்கடை

முதல் சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டி வரை உள்ள ராணி மங்கம்மா சாலையினை ரூபாய் 4.9 கோடி மதிப்பில் அகலப்படுத்தி, சிறு பாலங்கள் கட்டுவதற்கான பணிக்கும் எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜை இட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் அன்பழகன், திமுக மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நங்கவரம் பேரூர் கழகச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!