Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் உமர் தலைமை வகித்தார்.
கும்பகோணம் ஒன்றியத் தலைவர் அருணாசலம், பாபநாசம் ஒன்றியத் துணைச் செயலர். முகமது முஸ்தபா முன்னிலை வகித்தனர். சங்க மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். இதில் தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் கோவிந்தராஜ் ஒன்றியச் செயலர் பாஸ்கர், மகளிர் அணிச் செயலர். செந்தில் குமாரி உட்பட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். கும்பகோணம் நகரத் தலைவர் அப்துல்ரகீம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!