Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது…

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ( 40 ). கர்நாடகா பகுதியில் இருந்து குட்கா ஹான்ஸ், உள்ளிட்டவைகளை மொத்தமாக வாங்கி நாமக்கல், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து 15 மூட்டையில் சுமார் 200 கிலோ குட்கா, தனது காரில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.

கரூர் மாவட்டம், மாயனூர் கதவனை அருகே மாயனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளர். அப்போது காரை சோதனை செய்வதற்காக காரை நிறுத்தி உள்ளனர். கார் (shift dizer) நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளது. போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் காரில் 15 மூட்டைகளில் 200 கிலோ குட்கா இருந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்து குட்கா, கார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து போலீஸார் விசாரனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!