Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

சென்னை மாம்பலம்  ரயில் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக  மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.  அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த  ஒரு பெண் உள்பட  3 பேரை பிடித்து  விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம், ரூ.32 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கான எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என்பதால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இது ஹவாலா பணம் என கூறப்படுகிறது.

பிடிபட்ட  3 பேரையும் எழும்பூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு  பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 பேரும் கோவையை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இவர்கள் ஒரு நகைகடைக்கு பணத்தை  கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!