Skip to content
Home » லடாக்கில் பைக் ரைட் செய்த ராகுல் காந்தி…

லடாக்கில் பைக் ரைட் செய்த ராகுல் காந்தி…

  • by Senthil

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் என இரு முறை சென்றும் லடாக் பகுதிக்கு

செல்லவில்லை. இந்த நிலையில் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக ஆகஸ்ட் 17ம் தேதி காலை காஷ்மீர் புறப்பட்டு சென்றார். லடாக் மற்றும் அங்குள்ள லே பகுதிகளுக்கு பைக் ரைட் செய்தார் ராகுல் காந்தி. செல்லும் வழியில் பொதுமக்கள் ராகுலுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!