Skip to content
Home » காவல் துறையில்… சட்ட ஆலோசகர் பணியிடம் …. முதல்வர் தகவல்

காவல் துறையில்… சட்ட ஆலோசகர் பணியிடம் …. முதல்வர் தகவல்

தமிழக காவல்துறையில் 101 புதிய அறிவுப்புகளை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம்: வானகரம், மேடவாக்கம், ஆவடி, புதூர் உள்ளிட்ட இடங்களில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கப்படும். விழுப்புரம் மேல்மலையனூர்,  கரூர் மாவட்டம் நங்கவரம் உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுக்கா காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.

தாம்பரம் மாநகருக்கு  உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும். ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும். காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும். 

சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக ரூ.5.5 கோடியில் 3,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஆவடி, தாம்பரம் காவல்நிலையங்களிலும் காவலர்களுக்கு நாளொன்று உணவுப்படி ரூ.300 ஆக வழங்கப்படும். ஒரகடம், ராதாபுரம், ரிஷிவந்தியம்  உள்ளிட்ட 4 பகுதிகளில் ரூ.7.25 கோடியில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறைக்காக சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் புதிதாக உருவாக்கப்படும். நீதிமன்ற வழக்குகளில் அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ சட்ட அலோசகர் பணியிடம் இருக்கும். காவலர்களுக்கான எரிபொருள் படி 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.370-லிருந்து ரூ.515 ஆக உயர்ந்த்தி வழங்கப்படும். காவலர் அங்காடி வசதியை ஊர்க்காவலர் படையினருக்கும் விரிவுபடுத்தப்டும்.  குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த 25 ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவி வாங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!