Skip to content
Home » லியோ படத்தில் த்ரிஷாவின் முதல் தோற்றம் வெளியீடு….

லியோ படத்தில் த்ரிஷாவின் முதல் தோற்றம் வெளியீடு….

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

லியோ படத்தில் த்ரிஷாவின் முதல் தோற்றம் வெளியீடு

இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இன்று மாலை படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது. இந்நிலையில், லியோ படத்தில் நாயகியாக நடித்துள்ள த்ரிஷாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!