Skip to content
Home » விஜய் படம் என்றாலே பிரச்சனை வருகிறது…..லோகேஷ் கனகராஜ்..

விஜய் படம் என்றாலே பிரச்சனை வருகிறது…..லோகேஷ் கனகராஜ்..

  • by Senthil

7 ஸ்கிரீன் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 67 வது படமாக உருவாகியுள்ளது லியோ திரைப்படம். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அனிருத் கூட்டணியில் உருவாகும் இப்படம் நாளை உலகம் முழுவதும் வரும் 19ந்தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி படங்களைத் தொடர்ந்து 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் லியோ திரைப்படம் குறித்து பேட்டியளித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனராஜ்…. “‘லியோ’ திரைப்படம் உருவானதற்கு காரணமே மாஸ்டர் படம் தான்.‘லியோ’படத்தின் ட்ரெய்லரில் வந்த ஆபாச வசனத்திற்கு நானே  பொறுப்பு, அதற்கு எதிர்ப்பு வந்த உடனே mute செய்துவிட்டோம். கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய்  கிடையாது, அந்த கதாபாத்திரம் தான். அந்த வார்த்தை கட்டாயம் திரையில் வராது. படத்தில் அதிகளவில் போதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளை காட்டுவது அதை நிறுத்துவதற்காகவே தவிர ஊக்கப்படுத்த அல்ல. இது போன்ற விஷயங்களை விஜய் போன்ற பெரிய நடிகர்கள் சொல்லும்போது அது மக்களிடம் பெரியளவில் சென்று சேரும் என்ற நோக்கத்தில் தான் இந்த  கருத்துகளை சொல்கிறோம். லியோ படத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை. எனக்கும் விஜய்க்கும் இடையேயான புரிதல் நன்றாக உள்ளதால் படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!