Skip to content
Home » எல்ஐசி படப்பிடிப்பில் பங்கேற்றார் எஸ்.ஜே. சூர்யா…

எல்ஐசி படப்பிடிப்பில் பங்கேற்றார் எஸ்.ஜே. சூர்யா…

  • by Senthil

கோமாளி படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பிரதீப் அவரது அடுத்த படமான லவ் டுடே படத்தில் நடிகராக அறிமுகானார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான அந்த படம் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் அவரது அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

எல்ஐசி  படப்பிடிப்பில் பங்கேற்றார் எஸ்.ஜே. சூர்யா

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது திருமூர்த்தி மலையில், படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!