Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை.. தமிழகம், புதுச்சேரியில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது, அடுத்து வரும் நாட்களிலும் தொடரும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், கோவை, நீலகிரி, கடலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!