Skip to content
Home » LTTE பிரபாகரன் தமிழ் ஈழம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார் ……பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

LTTE பிரபாகரன் தமிழ் ஈழம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார் ……பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

  • by Senthil

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரன் 2009ல் நடந்த ஈழப்போரில்  கொல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அவரது குடும்பத்தினரும்  கொல்லப்பட்டதாக படங்களும் வெளியானது. இந்த நிலையில் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று  உலக தமிழ் பேரவை தலைவர் பழ.நெடுமாறன்  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழ் தேசிய பேரியக்கத்தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார்.  பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பதை தற்போது  அறிவிக்க இயலாது.  பிரபாகரன் இந்தியாவுக்கு எதிரானவர் என சிங்கள அரசு கட்டமைத்து விட்டது. பிரபாகரன் விரைவில் பொது இடங்களுக்கு வருவார்.  பிரபாகரன் மனைவி, மற்றும் மகளும் நலமாக உள்ளனர்.

சர்வதேச சூழல் சாதகமாக இருப்பதாலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதாலும்  இப்போது இந்த அறிவிப்பை வெளியிடுகிேறாம். பிரபாகரனுடன் தொடர்பில் உள்ளோம்.  பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.  பிரபாகரன் அனுமதியின் பேரிலேயே இந்த தகவலை தெரிவிக்கிறேன்.

இந்தியாவுக்கு எதிரான நாடுகளில் விடுதலைப்புலிகள் எப்போதும் உதவி கேட்டது இல்லை. இந்தியாவுக்கு எதிரான சீனா இலங்கையில் துறைமுகம் அமைத்து உள்ளது.  பிரபாகரனுக்கு இந்திய அரசின் உதவி தேவை. விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும்.தமிழ் ஈழம் குறித்த அறிக்கையை அவர் விரைவில் வெளியிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது கவிஞர் காசி ஆனந்தன், வழக்கறிஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன், தியாகு, உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!