Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நுகர்பொருள் வாணிபக் கழகத்தை முற்றுகையிட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்!

நுகர்பொருள் வாணிபக் கழகத்தை முற்றுகையிட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்!

தஞ்சையில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை டி.என்.சி.எஸ்.சி சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில இணை செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் சங்க அங்கீகாரத் தேர்தலை உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் தொழிலாளர்களின் பெயர் சேர்த்திட வேண்டும். பச்சை அட்டை 2022-ம் தேதியிட்டு வழங்க வேண்டும். 12-7-25 முதல் நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், துணை செயலாளர் வெங்கடேசன், இணை செயலாளர் சிவகுமார், செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல் , முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!