Skip to content
Home » வாக்களிக்காத முக்கிய வேட்பாளர்கள் ..

வாக்களிக்காத முக்கிய வேட்பாளர்கள் ..

  • by Senthil

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு, சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில்வாக்கு உள்ளது. ஊருக்கு சென்று வாக்களித்து விட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து வாக்குப்பதிவு பணிகளை பார்வையிட தாமதம் ஆகும் என்பதால், அவர் நேற்று வாக்களிக்க சொந்த ஊர் செல்லவில்லை. அதேபோல் தென்காசி அதிமுக கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் வசித்து வருகிறார். அவருக்கு ஓட்டு அங்குள்ளது. வாக்களிக்க கோவை சென்று விட்டு  வருவது என்பது கஷ்டம் என்பதால் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வாக்களிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!