நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவிடம் விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்ல முன்அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை விதித்தது. மேலும், வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆக.14 வரை அவகாசம் அளித்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
