கேஸ் சிலிண்டர் விநியோக முகவர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி திருவானைக்கோவில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 43. )இவர் மலைக்கோட்டையில் உள்ள ஒரு கேஸ் நிறுவனத்தில்
சிலிண்டர் விநியோகமுகவராக பணிபுரிந்து வந்தார்.இவருக்குஅதிக கடன் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனம் உடைந்த லட்சுமணன் கடந்த 18 ந்தேதி அன்று திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில்பூச்சி மருந்து (விஷம்) குடித்துள்ளார்.இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன்
நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்யாண சுந்தரபுரம்சின்ன நாயக்கன் தெருவை சேர்ந்தவர் காளியம்மாள் (81 )இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த காளியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில்காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனிபகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் வந்து சென்றனர்.அங்கு சந்தேகத்திற்கு இடமாகஇந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 42)என்பது தெரிய வந்தது.மேலும் இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக எடமலைப்பட்டி புதூர் போலீசார் அவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருச்சி காமராஜ் நகர் பகுதியில் உள்ள பொது கழிவறை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் திருச்சி தாரநல்லூர் காமராஜ் நகர் பகுதி சேர்ந்த பழனி அம்மாள் (வயது 60
)என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றதாக அவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 3 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 300 பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி மெக்டொனால்ட் ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கண்டோன்மென்ட்போலீசருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் நோன்பு பணிகள் ஈடுபட்டனர்.போறாங்க புகையிலை பொருட்கள் வைத்துக் கொண்டிருந்த திருச்சி திருவரங்கம் பகுதியைச் சேர்ந்த வினித் குமார் (வயது 22) என்ப வரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி கருமண்டபம் சோதனைச் சாவடி அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக திருச்சி கே கே நகர் பகுதியை சேர்ந்த தனராஜ் (வயது 19) முகவரி போலீசார் கைது செய்தனர். மேலும் திருச்சி ஆக்ஸ்போர்ட் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிப் முகமது (வயது23)என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து 240 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது
திருச்சி துரைசாமிபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார்அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணைகள் அவர் பாலக்கரைதுரைச்சாமி புரத்தை சேர்ந்தசஞ்சய் குமார் (வயது 23) என்பது தெரியவந்தது.இவர் அப்பகுதியில் போதை மாத்திரையை விற்றதாக பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.இவரிடமிருந்து 8போதை மாத்திரைகள்,ஒருஊசி,ஒரு சிலையின் வாட்டர் பாட்டில்ஆகவே பறிமுதல் செய்யப்பட்டது.
மது பாட்டில் விற்ற 3பேர் கைது
திருச்சி அழகிரி புரம் கொள்ளிடம் ஆற்று பகுதி அருகே மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு மது பாட்டில்கள் பதிக்க வைத்து விற்பனை செய்ததாக திருச்சி கார்த்திக் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் செல்வகுமார் (48) என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் அங்கு இருந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்ததங்க ராஜா (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் திருச்சி கூனி பஜார் பகுதியில் மது பாட்டில்கள் வச்சதாகஅதே பகுதியை சேர்ந்த ஸ்ரீமன்ராஜ் (30) என்பவரை பாலக்கரை போலீசார்கைது செய்தனர்.மேலும் இதே போல் திருச்சி கூனி பஜார் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (49) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 81 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 700 பறிமுதல் செய்யப்பட்டது.
