கேஜிஎப் டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், தற்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில், சுருதிஹாசன் தனது வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் காதல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். சொல்லப்போனால், உண்மையில் சுருதியின் தைரியத்தால் ரசிகர்கள் அவரை விரும்புகிறார்கள். சுருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் தனது காதலனுடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சுருதி வீர சிம்ம ரெட்டி, வால்டர் வீரையா, தி ஐ ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.