மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில், காதல் உறவு முறிந்ததால் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 23 வயது இளம்பெண்ணை அவரது காதலன் 1000 அடி பள்ளத்தாக்கில் தள்ளிக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீபாத் வதார் (25) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு அடுத்த மாதம் 12ம் தேதி வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறவிருந்ததே இக்கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. நாயக்வாடி நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியிலிருந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியை 1,000 அடி ஆழ பள்ளத்தாக்கில் தள்ளிக் கொன்ற காதலன்
