Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்-க்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவகாசியில் நேற்று ஜூன் 21-ந் தேதி இரவு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 1 மணிநேரம் இடைவிடாமல் ”வாண வேடிக்கை” நடத்தப்பட்டது. இதில் வண்ண வண்ண பட்டாசுகள் வானில் வெடித்து சிதறின. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் விஜய்க்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி: முதல்வர் ச.ஜோசப் விஜய்-க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.

error: Content is protected !!