கடந்த 12-ஆம் தேதி மதுரை தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான நிஷாந்திற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 1ம் தேதி வரை நிஷாந்தை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட நீதிபதி லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் கொள்ளைபோன நகைகள் ஏற்கனவே முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை நகைக்கடை கொள்ளையன் நிஷாந்திற்கு 15 நாள் நீதிமன்ற காவல்
