மும்பையின் லால்பாக் பகுதியில் உள்ள சிவாடா கல்லியில் அமைந்துள்ள பூனம் பார்க் குடியிருப்பு கட்டிடத்தின் 10-வது மாடியில் உள்ள வீட்டில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டின் ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியதுடன், தீப்பிழம்புகளும் காணப்பட்டன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மும்பை லால்பாக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
