தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம் அனுமதியுடன் திருச்சி மாவட்ட மல்லர் கம்பம் கழகம் ,கேலோ இந்தியா பயிற்சி மையம் சார்பில் புனித சிலுவை கல்லூரியில் 5-வது மாவட்ட அளவிலான மல்லர் கம்பம் போட்டி இன்று நடைபெற்றது.இதில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி இயக்குனர் திரவிய கிளாடினா வரவேற்றார். முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் விசு தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். முடிவில் திருச்சி மாவட்ட மல்லர் கம்பம் கழகத்தின் பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். மல்லர் கம்பம் கயிறு மல்லர் கம்பம் போட்டிகள் பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்று வருகிறது இன்று மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது.
