Skip to content
Home » மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய வடிவேலுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி…

மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய வடிவேலுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி…

உதயநிதி மற்றும் வடிவேலு கூட்டணியில் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.  சமூக நீதி குறித்தும், சமத்துவம் குறித்தும் பேசிய இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.  இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடிகர்கள் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

maamannan

சுமார் 700 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர், திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் காரணமானவர்களை சந்தித்து உதயநிதி மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

maamannan

ஏற்கனவே இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை சந்தித்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு சந்தித்த படக்குழுவினர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள உதயநிதி, தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!