Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் அரசு பஸ் மோதி ஒருவர் படுகாயம் – ஓட்டுநர், நடத்துநர் தப்பி ஓட்டம்!

கரூரில் அரசு பஸ் மோதி ஒருவர் படுகாயம் – ஓட்டுநர், நடத்துநர் தப்பி ஓட்டம்!

கரூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி விபத்து – குடும்பத்துடன் நடந்து சென்றவர் படுகாயம்; ஓட்டுநர், நடத்துநர் தப்பி ஓட்டம்.

கோவை மாவட்டத்தில் இருந்து திருச்சி மாவட்டம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, TN 38 N 4050, நேற்று இரவு கரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது.

அப்போது தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி அங்கிருந்து ஓடிச் சென்றதாகத் தெரிகிறது. பின்னர் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, பேருந்தில் இருந்த பயணிகள் தங்களது ஊர்களுக்கு சென்றனர்.

கரூர் புதிய பேருந்து நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதால், இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதாகப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்திற்குள் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றும், விபத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இரவு நேரத்தில் நேரக்காப்பாளர் அறையில் இரவு நேரத்தில் அதிகாரிகள் இருப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!