உத்தரப்பிரதேசத்தின் லக்னோ அடுத்த சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள ஓமாக்ஸ் நியூ ஹோட்டலில், கடந்த அக்டோபரில் சம்ரீன் (24) என்ற இளம்பெண் 10வது தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரது காதலன் அவனிஷ் ஜெய்ஸ்வால், தற்போது சிறை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்ரீனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்தார்.
காதலியைக் கொன்ற வழக்கில் சிறையில் இருந்த காதலன் மரணம்
