செம்மொழி விரைவு பெயில் திருச்சி பாலக்கரை பேலஸ் தியேட்டர் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இந்த ரெயிலில் அடிபட்டு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று பெயிலில் அடிபட்டு இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
