Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருச்சி ரயில்வே ஸ்டேசனில் நுழைய முயன்ற 15 பேர் கைது ….

மணிப்பூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். மணிப்பூரில் வாழும் பழங்குடி மக்களுக்கு நீதி வழங்கிட வேண்டும். மணிப்பூர் மாநில பெண்களை கற்பழித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் படி ஆயுதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் திருச்சியில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில்

ஈடுபட முயன்றனர். நிறுவனத் தலைவர் வக்கீல் பொன் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் ஜங்ஷன் ரவுண்டானாவில் இருந்து ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர் . இந்நிலையில் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி ஆணையர் கென்னடி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!