Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டப் பட்டது. தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது . விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!