Skip to content
Home » தமிழ்நாடு முழுவதும்……பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு முழுவதும்……பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.  தி.மு.க. அதிமுக, மதிமுக, பாஜக,  உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர்.

திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதே போல், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரும் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சந்திரகாசன்  இன்று தனது வேட்பு மனுவை,  அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்்  ஆனி மேரி ஸ்வர்ணாவிடம்  தாக்கல் செய்தார். அவருடன் அரியலூர் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், தேமுதிக அரியலூர் மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல், எஸ் டி பி ஐ மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் வந்து இருந்தனர்.

விருதுநகரில் தேமுதிக வேட்பாளர்  விஜயபிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். பெரம்பலூரில் பாஜக வேட்பாளராக பாரிவேந்தர்(ஐஜேகே) வேட்புமனு தாக்கல் செய்தார்.  முன்னாள்  கவர்னர் தமிழிசை தென்சென்னையில்  பாஜக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.  தஞ்சையில்  சுயேச்சை வேட்பாளர் விஜயகுமார்(47) வேட்பும’னு தாக்கல் செய்தார். இவர்  அண்ணா புரட்சித்தலைவர், அம்மா திமுக கட்சியின் மாவட்ட செயலாளர் என  கூறினார்.  பூதலூைரை சேர்ந்த இவர்  திருக்காட்டுப்பள்ளியில் மெக்கானிக்காக இருக்கிறார்.

நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி, புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம்  , தர்மபுரி திமுக வேட்பாளர் மணி,  தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி,  ஆரணி பாமக வேட்பாளர் கணேஷ்குமார்,  சிதம்பரம்(தனி) அதிமுக வேட்பாளர் சந்திரகாசன்,  சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்,  கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், விருதுநகர் தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர்  மாணிக்கம் தாகூர்,  கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர்  பாபு,பெரம்பலூர் அதிமுக வேட்பாளர்  சந்திர மோகன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி,  பரஞ்சோதி ஆகியோர் வந்திருந்தனர்.

நாமக்கல் கொமதேக வேட்பாளர்  மாதேஸ்வரன், ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.தொடர்ந்து பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!