Skip to content
Home » மயிலாடுதுறையில் கேரம் போட்டி…. 128 மாணவர்கள் பங்கேற்பு….

மயிலாடுதுறையில் கேரம் போட்டி…. 128 மாணவர்கள் பங்கேற்பு….

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக் தனியார் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் சீர்காழி வட்டங்களில் ஏற்கனவே நடைபெற்ற குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30

பள்ளிகளை சேர்ந்த 128 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி முன்னிலையில் நடைபெற்ற போட்டிகளை பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன் தொடக்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!