Skip to content
Home » மயிலாடுதுறை காங். வேட்பாளர் யார்? புதிய தகவல்

மயிலாடுதுறை காங். வேட்பாளர் யார்? புதிய தகவல்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இதில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு  விட்டனர். விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார். ஆனால் மயிலாடுதுறை  மக்களவை தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

கடந்த 1 மாதமாகவே மயிலாடுதுறை காங் . வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி என்று  பேசப்பட்டு வந்தது. இவர் டில்லியில் இருக்கிறார்.  ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவஇவரது தாயார்  கும்பகோணத்தை சேர்ந்தவர் என்பதால் மயிலாடுதுறையில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி விரும்புவதாக கூறப்பட்டது.

ஆனால்  வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏன் என விசாரித்தபோது,  பிரவீனுக்கு எதிர்ப்பு இருப்பதால் அவருக்குப்பதில் மீண்டும் மணிசங்கர அய்யரை  நிறுத்தலாமா என்று பரிசீலிக்கப்பட்டதாம். அவருக்கு 83 வயது ஆகிவிட்டதால்  அவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. ஆனால்  பிரவீன் சக்கரவர்த்தி இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் இன்று பேசப்படுகிறது.

வேட்பாளர் குறித்து இன்று பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்  செல்வப்பெருந்தகை, இன்னும் சில மணி நேரத்தில்  மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விடுவார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!