Skip to content
Home » மயிலாடுதுறை… பரிமள ரெங்கநாதர் கோவிலில் 108 விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை….

மயிலாடுதுறை… பரிமள ரெங்கநாதர் கோவிலில் 108 விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திருவிழந்தூரில் பஞ்ச அரங்கங்களுல் ஒன்றானதும், 108 வைணவ ஆலயங்களுல் 22வது ஆலயமுமான பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சந்திரன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற இந்த ஆலயத்தில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு 108 விளக்கு பூஜை

நடைபெற்றது. பரிமளரெங்கநாயகி தாயார் மகாலெட்சுமி அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் வாழ்வு வளம்பெறவும் உலக நன்மை வேண்டியும் 108 திருவிளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!