Skip to content
Home » மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம். பழமை வாய்ந்த இக்கோயிலில் கடைசியாக 2005-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. தற்போது திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் இன்று கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!