Skip to content
Home » எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல்….7.5% ஒதுக்கீட்டில் சேலம் கிருத்திகா முதலிடம்

எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல்….7.5% ஒதுக்கீட்டில் சேலம் கிருத்திகா முதலிடம்

  • by Senthil

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்  படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்  வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள்  விண்ணப்பம் செய்திருந்தனர். மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில்   இன்று காலை 10 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  வெளியிட்டார்.

அதன்படி   அரசு ஒதுக்கீட்டில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபஞ்சன் 720க்கு 720 பெற்று முதலிடம் பிடித்தார். 7.5% இட ஒதுக்கீட்டில்  சேலம் மாணவி கிருத்திகா முதலிடம் பிடித்தார். இவர் 720க்கு 569 மார்க் பெற்றார்.தர்மபுரி பச்சையப்பன்  2ம் இடம் பெற்றார்.  தமிழ் நாட்டில் அரச மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்களும், இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக, மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிவிப்பில், சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளிளும், இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9 அன்றும், 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31 அன்றும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 சுற்று கலந்தாய்வுகளின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பா் 21-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு  கலந்தாய்வு நடக்கும் அதே நாட்களில், மாநில ஒதுக்கீட்டுக்கும்  கலந்தாய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!