மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது” என தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று (ஆக.21) கவனத்தை ஈர்த்த CPI உறுப்பினர் ராமச்சந்திரன், “உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கம் செய்து, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
