தஞ்சாவூர் அருகே உள்ள கிராமப்பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உடையார்கோயில் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் துளசிராமன் (55). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 16.7.26ம் அன்று அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ரேஷன் கடைக்கு சென்று விட்டு மிகவும் சோர்வாக வந்ததை பார்த்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவரது சகோதரி விசாரித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணிற்கு என்ன நடந்தது என்று கூற தெரியவில்லை. உடன் அவரது குடும்பத்தினர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் இனியவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் துளசிராமன் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அம்மாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் 21ம் தேதி துளசிராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
