Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி

தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் அந்தோணி ராஜ் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரில் அந்தோணி ராஜை அழைத்து விசாரிக்கும்போது போலீசார் மரியாதை குறைவாக நடத்தியதாகவும், கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் மே 21ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது விஷமருந்திவிட்டு அவர் காவல் நிலையம் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவல் நிலையத்தில் மயங்கிய அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . முதியவர் அந்தோணி ராஜை தாக்கியதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர் முரளிதரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி சேகர் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!