Skip to content
Home » எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

  • by Senthil

புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி வெளியிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல சித்தரித்து சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து அவர்கள் மீது கட்சியின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதன்படி பாஜக பிரமுகர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து பாஜக பொதுச் செயலாளர் மோகன்குமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் விஜயபூபதி, ராக் பெட்ரிக், பாபு ஆகிய மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!