Skip to content
Home » திருச்சி பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை…. எடப்பாடி இன்று திறக்கிறார்.

திருச்சி பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை…. எடப்பாடி இன்று திறக்கிறார்.

திருச்சி  திருவெறும்பூர் பெல் வளாகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு  முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.  திருச்சி தெற்கு  புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. ப.குமார் ஏற்பாட்டில் இந்த சிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா இன்று மாலை 5 மணி அளவில் நடக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி இந்த சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார். விழாவுக்கு  மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்குகிறார். அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் என். கார்த்திக் வரவேற்கிறார்.

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம்,  காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர்,  எம்.ஆர். விஜயபாஸ்கர், பரஞ்சோதி,  மற்றும் மாவட்ட செயலாளர்கள் அருண்மொழித்தேவன், குமரகுரு, சேலம் இளங்கோவன்,  அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல், மருங்காபுரி சந்திரசேகர், எஸ்.எம். பாலன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப்பொதுச்செயலாளர்கள் கே.பி. முனுசாமி,  நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல்  சீனிவாசன்,  அமைப்பு செயலாளர்கள்  செல்லூர் ராஜூ,  ஓ.எஸ். மணியன்,  ஜெ. பேரவை  செயலாளர் உதயக்குமார்,.  தொழிற்சங்க பேரவை  செயலாளர் கமலக்கணன்,  ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள் வைரமுத்து, செந்தில்நாதன்,  சின்னதுரை, கடலூர் பாண்டியன்,  பாசறை செயலாளர் பரமசிவம்,  அரியலூர் ராஜேந்திரன்,  மதுரை ராஜ் சத்யன், முருகுமாறன்  மற்றும் திருச்சி மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள்,    மாவட்ட அதிமுக நிர்வாகிகள் விழாவில்  பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், வர்த்தகப்பிரிவு செயலாளர் சூரியூர் ராஜா,  துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், கூத்தைப்பார் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று மதியம்  திருச்சி வருகிறார்.  அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க  மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!