Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்

வங்க கடலில்  சென்னையில் இருந்து கிழக்கு, வடகிழக்கில்  110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது நாளை  முற்பகல் ஆந்திராவில்  நெல்லூருக்கும்,  மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல்  கரையை கடக்கும்போது தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.  இன்று சரியாக 11.30 மணிக்கு மிக்ஜம் தீவிர புயலாக வலுவடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் மழை கொட்டும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!