Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் அருகே நரசிம்மபுரம் தண்டு மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நரசிம்மபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் ஆலய ஆடிமாத பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி புள்ளபூதங்குடி குளக்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி

எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர்.

அதனை தொடா்ந்து, ஸ்ரீ தண்டு மாரியம்மனுக்கு பால் அபிஷேக, ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது.

இவ்விழாவில் நரசிம்மபுரம் கிராமவாசிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசித்து வழிப்பட்டனர்.

error: Content is protected !!